Thursday, 31 May 2018

Transfer Counselling For Teachers 2018 - Guidelines And Order Issued

No comments :
2018-2019ஆம் ஆண்டுக்கான பொதுமாறுதல் வழிகாட்டும் நெறிமுறைகள் சார்ந்து தமிழ்நாடு அரசின் அரசாணை

Click Here to Download - G.O Ms 403 - Transfer Counselling For Teachers 2018 - Guidelines And Order Issued (29.05.2018) 

1,6,9,11 std - New Text Books Download Now via tnscert ebooks link

No comments :
புதிய பாடநூல்கள் (1,6,9,11) இணையத்தில் கிடைக்கின்றன. பார்த்து மகிழவும்.

Teachers Transfer Counseling - விண்ணப்பங்கள் எப்போது பெறப்படும்?

No comments :
கலந்தாய்வு செய்தி: ஜூன் 10 க்குள் விண்ணப்பம் பெறப்படும். ஜூன் கடைசி வாரத்தில் கலந்தாய்வு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிளஸ்–2 விடைத்தாள் நகல் ஜூன் 2–ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்

No comments :
பிளஸ்–2 விடைத்தாள் நகல் ஜூன் மாதம் 2–ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், மறு கூட்டல்,மறு மதிப்பீட்டுக்கு 4–ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவிதெரிவித்துள்ளார்.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–2018–ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ்–2பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள்களின் நகல்கோரி விண்ணப்பித்த மாணவர்கள் அடுத்த(ஜூன்) மாதம் 2–ந் தேதி அன்று பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களதுபதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்தபிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து ஜூன் 4–ந் தேதி முதல் 6–ந் தேதி வரையிலான தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச்செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நூலகங்களில், 'WIFI' ; ஆசிரியர்களுக்கு, 'BIOMETRIC'

No comments :
'அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவு, 'பயோமெட்ரிக்' முறைக்கு மாற்றப்படும். நுாலகங்களில், 'வைபை' வசதி ஏற்படுத்தப்படும்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்தார்.

சட்டசபையில், நேற்று பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக, செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள்:அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவுகள், மின்னணு வருகைப் பதிவு எனப்படும், 'பயோமெட்ரிக்' முறைக்கு மாற்றப்படும். அதற்கு, ஒன்பது கோடி ரூபாய் செலவிடப்படும்.அரசு பள்ளிகளில், 6.23 கோடி ரூபாய் மதிப்பில், நுாலகங்கள் அமைக்கப்படும்.மாணவர்கள், திறன் சார்ந்த கல்வியை பெறும் வகையில், 67 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 3.55 கோடி ரூபாய் செலவில், தொழிற்கல்வி திட்டம் செயல்படுத்தப்படும்.தொன்மை வாய்ந்த கட்டடம், அரிய வகை நுால்கள் மற்றும் ஆவணங்களை பாதுகாக்கும் வகையில், 1.50 கோடி ரூபாய் செலவில், குளிர்சாதன வசதியுடன்,கன்னிமாரா நுாலகம் புதுப்பிக்கப்படும்.காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள மூன்று நுாலகங்கள், 1.50 கோடி ரூபாய் செலவில்,நவீன வசதிகளுடன் கூடிய, மாதிரி நுாலகங்களாகமாற்றப்படும்.காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், பெரம்பலுார், திருவாரூர், நாகப்பட்டினம், நீலகிரி மாவட்டங்களில், பள்ளிகளுக்கு மாணவர்களை ஈர்க்கும் திட்டம், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது.இத்திட்டம், இந்த கல்வியாண்டில், 1.28 கோடி ரூபாய் செலவில், அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.அனைத்து ஒன்றிய தலைமை இடங்களிலும், மாணவர்களின் பயன்பாட்டிற்காக, ஒரு கோடி ரூபாய் செலவில், 'ஆதார்' சேர்க்கை மையங்கள் ஏற்படுத்தப்படும்.

மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில், ஒரு மாவட்டத்திற்கு ஒரு பள்ளிவீதம், 32 விளையாட்டு மேம்பாட்டு பள்ளிகள், 96 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.பார்வையற்ற மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்காக, 96 லட்சம் ரூபாய் செலவில், கணினி மூலமாக, நவீன தொழில்நுட்பத்துடன், பேசும் கருவி, பேசும் புத்தகம், மென்பொருள், கற்றல் உபகரணம், தொடுதிரை, தொடுகை வரைபடம், சிறப்பு விசைப்பலகை, ஒலிப்புத்தகம் ஆகிய வசதிகள், மாவட்ட மைய நுாலகங்களில்ஏற்படுத்தப்படும்.வரும் கல்வியாண்டில் இருந்து, ஒவ்வொரு மாதமும் பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்த, 90.97 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.மாணவர்கள் பயன்பெறும் வகையில், உயர் கல்வி நிறுவனங்களுடன், அரசு பள்ளிகளை இணைக்கும் திட்டம், 67 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.அரசு உயர்நிலை பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில், இடைநிலை கல்வி பயிலும் திறன்மிக்க மாணவர்கள், பிற மாநிலங்களில் உள்ள அறிவியல், தொழிற்நுட்பம், கல்வி சார்ந்த தேசிய நிறுவனங்களை பார்வையிட, வாய்ப்புகள் வழங்கப்படும்.இதற்காக, 40.20 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.

அனைத்து மாவட்ட நுாலகங்களிலும், 32 லட்சம் ரூபாய் செலவில், 'ஸ்மார்ட் டிவி அல்லது எல்.இ.டி., புரஜெக்டர்' வசதி ஏற்படுத்தப்படும்.குடிமைப் பணி தேர்வுகள் உட்பட, அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் தேவைப்படும் தகவல்கள், உரிய நேரத்தில் சென்றடையும் வகையில், பொது நுாலகங்களுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் செலவில், மென்பொருள் உருவாக்கப்படும்.மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் வகையில், 32 மாவட்டங்களிலும், தலா, 5,000 ரூபாய் வீதம், 'நுாலக ஆர்வலர் விருது' வழங்கப்படும்.முதற்கட்டமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை மாவட்ட நுாலகங்களில், 'வைபை' வசதி ஏற்படுத்தப்படும்.

மாணவர்களுக்கு, பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, 'இளம் படைப்பாளர் விருது' வழங்கப்படும். மாணவர்களுக்கு பயன் தரும் வகையில், பல்வேறு பாடப்பிரிவுகளை சார்ந்த, 5,000 வீடியோக்கள் தொகுக்கப்பட்டு, தமிழக அரசு கேபிள் வழியாக, ஒரு மணி நேரம்ஒளிபரப்பப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

SC, ST - மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடாது பிரதமருக்கு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

No comments :
பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை ஏப்ரல் மாதத்தில் இருந்து திரும்ப பெற முடியாது என்று கல்வி உதவித்தொகை திட்ட வழிகாட்டி விதியில் சமீபத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிக அளவில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் ஏழ்மை நிலையில் உள்ளனர். இவர்களால் ‘மெரிட்’ மூலம் அரசு இடஒதுக்கீட்டை பெற முடியாது. சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இவர்கள் படித்து, கல்வி உதவித்தொகை மூலம் பயனடைந்து வருகின்றனர்.இந்த திட்டம் ஏராளமான மாணவர்களை உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வியில் சேர வழிவகை செய்கிறது. ஒட்டுமொத்த கல்வி சேர்க்கை விகிதம், 45 சதவீதத்தை தாண்ட இந்த திட்டம் மிக பயனுள்ளதாக உள்ளது.

எனவே புதிய விதிகளை வகுத்து, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கல்வி கட்டணத்தை திரும்ப பெற முடியாது என்றுகூறுவதால், அவர்களுக்கு உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி மறுக்கப்படுவதோடு, ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கும் இலக்கை அடைவதில் பின்னடைவு ஏற்பட்டுவிடும். மேலும் இது எஸ்.சி., எஸ்.டி. இனத்தவர் மத்தியில் அதிருப்தியை உருவாக்கும்.சமூக நீதி, எஸ்.சி., எஸ்.டி. இனத்தவர் மேம்பாடு போன்றவற்றுக்கான திட்டங்களை வலுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளை, திருத்தப்பட்ட வழிகாட்டி நீர்த்துப்போக செய்து விடும். மத்திய பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு பல ஆண்டுகளாக தேக்க நிலையில் உள்ளது.

அந்த வகையில் மார்ச் மாதம் வரை தமிழக அரசுக்கு மத்திய அரசு தரவேண்டிய நிலுவைத்தொகை ஆயிரத்து 803 கோடியே 50லட்சம் ஆகும்.ஏற்கனவே இருக்கும் பயன்களை குறைப்பதற்காக விதிகளில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு பதிலாக, நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க வேண்டும். மற்ற மத்திய அரசு திட்டங்களில் உள்ளது போல, கல்வி உதவித்தொகை திட்டத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பு முறையே 60:40 சதவீதம் என்றளவில் இருக்க வேண்டும்.எனவே இதில் நீங்கள் தலையிட்டு, எஸ்.சி.,எஸ்.டி. மாணவர்களை பாதிக்கும் விதிகளை திரும்ப பெற நடவடிக்கை வேண்டும். கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடாது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகையை விரைவாக மத்திய அரசு அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோடை, 'விடுமுறை ' முடிந்தது நாளை பள்ளிகள் திறப்பு

No comments :
கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகளில் நாளை முதல், வகுப்புகள் துவங்க உள்ளன. புதிய கல்வி ஆண்டுக்கான பாட புத்தகங்களும், சீருடைகளும் நாளை வழங்கப்பட உள்ளன.

தமிழக பாடத்திட்டத்தில், பள்ளி இறுதி தேர்வும், பொது தேர்வுகளும், ஏப்., 20ல்முடிந்தன. ஏப்., 21 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இன்று வரை, 41 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன.

சென்ற ஆண்டில், முந்தைய வகுப்புகளில் இருந்த மாணவர்கள், நாளை அடுத்த வகுப்புக்கு, தேர்ச்சி பட்டியலின்படி மாற்றப்பட உள்ளனர்.முதல் நாளான நாளை, அரசின், 14 வகை நலத்திட்டங்களில், பாட புத்தகம், நோட்டு புத்தகம், இலவச சீருடை போன்றவை, பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.

பள்ளி திறப்பை பொறுத்தவரை, நாளை மறுநாள் சனிக்கிழமை என்பதால், பல தனியார் பள்ளிகள், தங்கள் பள்ளி திறப்பை, ஜூன், 4க்கு தள்ளி வைத்துள்ளன. இந்த பள்ளிகள், முதலாவதாக வரும் சனிக்கிழமையில், கூடுதலாக ஒரு நாள் பணியாற்றி ஈடு செய்ய முடிவு செய்துள்ளன.

பிளஸ் 1 மதிப்பெண் பட்டியல் ஜூன் 4ம் தேதி வினியோகம்

No comments :
பிளஸ்1 தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து தற்காலிக மதிப்பெண் பட்டியல்கள் ஜூன் 4ம் தேதி முதல் வினியோகிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

மதிப்பெண் பட்டியல்: பிளஸ் 1 தேர்வு எழுதியோருக்கு இணைய தளம் மூலமாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். அரசுத்தேர்வுத்  துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்று வழங்கப்படும் வரை மட்டுமே இந்த மதிப்பெண் பட்டியல் செல்லும்.

ஜூன் 4ம் தேதி பிற்பகல் முதல் மாணவர்கள் தங்கள் பள்ளி அல்லது தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். மேலும் www.dge.tn.nic.in  இணைய தளத்தில் இருந்தும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த மதிப்பெண் பட்டியல்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது தேர்வு மைய பள்ளித் தலைமை ஆசிரியர் கையெழுத்து போட்டிருந்தால் மட்டுமே செல்லும்.

விடைத்தாள் நகல், மறுகூட்டல்: பிளஸ் 1 விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு  விண்ணப்பிக்க விரும்புவோர் பள்ளி மற்றும் தேர்வு எழுதிய மைங்கள் மூலமாக ஜூன் 1, 2, 4ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே மறு மதிப்பீடு கேட்டு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் பெற்ற பிறகே மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம்: விடைத்தாள் நகல் பெறுவதற்காக பகுதி 1 மொழிப்பாடத்துக்கு 550, மொழிப் பாடம் 2 (ஆங்கிலம்), 550, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் 275கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டல் செய்ய மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியல் பாடங்கள் தலா 305, மற்ற பாடங்களுக்கு தலா 205 செலுத்த வேண்டும். கட்டணங்கள் அந்தந்த பள்ளிகளில் பணமாக செலுத்த வேண்டும்.

சிறப்பு துணைத் தேர்வு:  பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி தனியாக அறிவிக்கப்படும். பிளஸ் 1 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் பிளஸ் 2 வகுப்பில் பெறும் மதிப்பெண்களுடன் சேர்த்து அடுத்த ஆண்டு தேர்வு முடிவில் கணக்கிடப்படும். பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் தற்போது நடக்க உள்ள சிறப்பு துணைத் தேர்வில் எழுதி தேர்ச்சி பெறலாம். அல்லது பிளஸ் 2 தேர்வின் போதும் எழுத வாய்ப்பு வழங்கப்படும். 

இவ்வாண்டு 200 பள்ளிகள் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்

No comments :
இந்த ஆண்டு 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.
தமிழகத்தில் தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் 854 பள்ளிகளில் குறைந்த அளவு மாணவர்கள் இருக்கின்றனர். அதனால் அந்தபள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அங்கன்வாடியில் உள்ள 4.35 லட்சம் மழலைகளுக்கு உரிய ஆங்கில பயிற்சி அளித்து அரசுப் பள்ளியில் சேர்க்க அரசு பரிசீலித்து வருகிறது.

பணி மாறுதலுக்கு வழிகாட்டு நெறிகள் : பள்ளிக் கல்வித்துறை வெளியீடு

No comments :
பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறையில் மாறுதல் வழங்க மாவட்டகல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், இணை இயக்குநர் ஆகியோர் தகுதி உடையவர்கள்.

2017-2018ம் ஆண்டில் பணி நிரவல் பெற்றவர்கள் மாறுதல் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள அனுமதி வழங்கலாம்.ஒரு இடத்துக்கு ஒருவருக்கு மேல் மாறுதல் கேட்டால் அவர்களுக்கு சில முன்னுரிமையின் அடிப்படையில் வழங்க வேண்டும். குறிப்பாக புற்றுநோயாளிகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, மற்றும் டயாலசிஸ் செய்து கொள்பவர்கள், முற்றிலும் கண்பார்வையற்றவர்கள் என 21 வழிகாட்டுதல்கள் படி வழங்க வேண்டும்.

சிறப்பு முன்னுரிமை ்அடிப்படையில் மாறுதல் பெறுவோர் 3 ஆண்டுகள் கவுன்சலிங்கில் பங்கேற்க முடியாது. மலைப் பாங்கான இடங்களுக்கு செல்ல தயக்கம் காட்டுவார்கள் என்பதால் மலை சுழற்சி முறையை பின்பற்ற வேண்டும். ஈராசிரியர் பள்ளியில் ஒருவர் மாறுதல் பெற்றால் புதிய ஆசிரியர் பணியில் சேர்ந்த பிறகுதான் அவரை விடுவிக்க வேண்டும். இதுபோல 21 வழி்காட்டு நெறிமுறைகள் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்க திட்டம் : செங்கோட்டையன் தகவல்

No comments :
அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது குறித்து முதல்வருடன்  ஆலோசனை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகல்வித்துறை மானிய கோரிக்கையில் விவாதத்தின் போது, எம்எல்ஏ செம்மலை ( மேட்டூர்) பேசியதாவது: பாட திட்ட மாற்றம் ரேங்கிங் முறையை மாற்றியது உள்ளிட்ட பல அம்சங்களில் பள்ளி கல்வித்துறை புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.தனியார் பள்ளிகள் மீதான பெற்றோரின் மோகத்தை குறைக்கும் வகையில் ஆங்கில வழியிலான எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அரசு பள்ளிகளில் தொடங்க வேண்டும். அனைத்து பள்ளிகளும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி, இயங்குவதால் மெட்ரிக்குலேசன் என்ற பெயரை தனியார் சுய நிதி பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன் :  அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி தொடங்குவது குறித்து முதல்வர்,  துணை முதல்வருடன் கலந்து பேசி ஆலோசனை நடத்தி விரைவில் முடிவு  எடுக்கப்படும். மெட்ரிக்குலேசன் பெயர்மாற்றுவது குறித்து அரசு பரிசீலிக்கும்.

செம்மலை : அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி கொண்டு வந்தால்தான் போட்டியை தவிர்க்க முடியும். வயிற்றில் குழந்தைஇருக்கும் போதே தனியார் பள்ளிகளில் எல்கேஜியில் சேர்ப்பதற்கு பதிவு செய்கின்றனர். எனவே, விரைந்து இதற்கான முடிவு எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் 4 வயதிற்குள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கின்றனர்.

 அமைச்சர் செங்கோட்டையன் : அரசு கண்டிப்பாக விரைந்து முடிவு எடுக்கும். அங்கன்வாடி மையங்களுடன் ஒருங்கிணைந்து உள்ள ஆரம்ப பள்ளிகளில் 90 சதவீதம் மாணவர்கள் படிக்கின்றனர். 5 வயது பூர்த்தியானால் மட்டுமே அரசு பள்ளிகளில் சேர்க்க முடியும் என்ற விதி உள்ளது. தனியார் பள்ளிகளில் 4 வயதுக்கு முன்னரே குழந்தைகளை சேர்ப்பது தொடர்பாக உரிய சட்ட விதிகள்கொண்டு வர நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

பள்ளிக் கல்வித்துறைக்கு 2018-19ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 27,205.88கோடி ஒதுக்கீடு

No comments :
சட்டப் பேரவையில் நேற்று பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.

அதற்கு பதிலளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

பள்ளிக் கல்வித்துறைக்கு 2018-19ம்  ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தில்27,205.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

தேர்வு முறையில் தர வரிசை ரத்து செய்யப்பட்டதுடன், மாணவரின் செல்போனுக்கு உடனடியாக தேர்வு முடிவுகள் அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரம் பள்ளிகளில் 60 கோடி செலவில் ஹைடெக் ஆய்வகம் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேரவையில் தெரிவித்தார்.இந்த ஆண்டு முதல் இணைய தளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. ரூபாய் நோட்டுகளில் இருப்பது போல ரகசிய குறியீடுகள் கொண்ட கிழியாத வகையில் தயாரிக்கப்பட்ட மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படுகிறது. கடந்த 14 ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருந்த பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு 1, 6, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு நடைமுறைக்கு வர உள்ளது.

இதையடுத்து, மூன்றாண்டுகளில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் என்ற இலக்கினை, இந்த ஆண்டிலேயே அடைவது என தீர்மானித்து பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளைச் செம்மைப்படுத்தவும், எளிமைப்படுத்தவும், அதன் நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு 68 மாவட்ட கல்வி அலுவலகங்கள் நிர்வாக வசதிக்காக 120 மாவட்ட கல்வி அலுவலகங்களாக உயர்த்தப்பட்டுள்ளன.நபார்டு வங்கி உதவியுடன் அறிவியல் உபகரணங்கள், கணினிகள், அறிவியல் ஆய்வகங்கள், ஆங்கில மொழி ஆய்வகங்கள், கணித ஆய்வகங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், ரூ.200 கோடி செலவில் அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், தளவாடங்கள், ஆய்வகங்கள், நூலகங்கள், கழிப்பறைகள், குடிநீர்வசதி மற்றும் சுற்றுச்சுவர் ஏற்படுத்தப்பட உள்ளன. பள்ளிகளில் தூய்மைப் பணிகள் “100 நாள் வேலை” திட்டப் பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்  நினைவைப்போற்றும் வகையில் அவரின் பெரிலேயே,  டிபிஐ வளாகத்தில் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.39 கோடியே 90 லட்சம் செலவில்  ஒருங்கிணைந்த கல்வித்துறைக்கான கட்டிடம் கட்டப்படும். மேலும், 3090 உயர்நிலைப் பள்ளிகள் - 10 கணினிகளுடனும், 2939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு - 20 கணினிகளுடனும் கூடிய  ஹைடெக் ஆய்வகம் ஏற்படுத்தப்பட உள்ளது.

குறிப்பாக 3000 பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு தலா 2 லட்சம் வீதம் 60 கோடி செலவில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் உலகத்தர தொழில்நுட்பத்தோடு ரோபாடிக் பயிற்சி வகுப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தொடங்க பரிசீலித்து வருகிறோம். கடந்த 2017-18ம் கல்வி ஆண்டில்  8869 பள்ளிகள் 90,889 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

32 மாவட்ட மைய நூலகங்களில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகளுக்குப் போட்டித்தேர்வு பயிற்சி மையங்கள் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ளது. உலகப் புத்தக தினத்தை (ஏப்ரல் 23) முன்னிட்டு 24-1-2018 முதல் 15-4-2018 முடிய மாநில அளவில் ஒரு லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2020ம் ஆண்டிற்குள் நூலகங்களில் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். சிந்துசமவெளி நாகரிகம்உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் குறித்த சிறப்பு நூலகம்   மற்றும் காட்சிக்கூடம்,  கீழடி, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, நீலகிரி, திருச்சி, கோவை, சென்னை மாவட்டங்களில் அமைக்கப்படும். உலகத் தமிழ்ச் சங்கம் கண்ட மதுரையில் 6 கோடி மதிப்பில் மாபெரும் நூலகம் அமைக்க ஆவனசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

புதுமைப்பள்ளி, கனவு ஆசிரியர் விருதுக்கு நிதி ஒதுக்கீடு - அமைச்சர் செங்கோட்டையன்

No comments :
128 பள்ளிகளுக்கு 192 லட்சம் செலவில் புதுமைப்பள்ளி விருது வழங்கப்படும்.தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.1 லட்சமும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2 லட்சமும் வழங்கப்படும்.
192 ஆசிரியர்களுக்கு 10,000 வீதம் 19.2 லட்சம் செலவில் பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய கனவு ஆசிரியர் விருது வழங்கப்படவுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விப் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்த  காமராசர் விருது வழங்கப்பட உள்ளது. மாவட்டத்திற்கு 30 மாணவர்கள் என மொத்தம் 960 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 145.3 லட்சம் செலவில் விருது வழங்கப்பட உள்ளது.

அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை

No comments :
எம்எல்ஏ செம்மலை (மேட்டூர்): அரசு பள்ளிகளில் படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பள்ளிகல்வித்துறை அமைச்சர் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை என்று கூறுகிறார். அந்த நிலைமை வரக்கூடாது. சில அரசு பள்ளிகளில் 10 மாணவர்கள் தான்  படிக்கின்றனர். இனி வரும் காலங்களில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: இந்த ஆட்சியில் பள்ளிகளை மூடும் எண்ணம் கிடையாது. 854 பள்ளிகளில் 29 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை.

மற்றபள்ளிகளில் 10 மாணவர்களுக்கு அதிகமாகசேர்க்க பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 10 வரை கூடுதலாக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள 850 பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். எனவே, பள்ளிகளை மூடும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை.

சென்னையில் புதிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை கட்டிடம் கட்டப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

No comments :
சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில்  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை கட்டிடம் கட்டப்படும்.முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்  நினைவைப்போற்றும் வகையில் அவரின் பெரிலேயே,
டிபிஐ வளாகத்தில் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.39 கோடியே 90 லட்சம் செலவில்  ஒருங்கிணைந்த கல்வித்துறைக்கான கட்டிடம் கட்டப்படும்.

பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி எகிறியது எப்படி?

No comments :
பிளஸ் 1 தேர்வில், வினாக்கள் மிக கடினம் என, மாணவர்கள் புலம்பிய நிலையில், 'ஜீ பூம்பா' மந்திரம்போல், தேர்ச்சி விகிதம், பிளஸ் 2வை விட அதிகரித்துள்ளது.

தமிழக பாடத்திட்ட மாணவர்கள், தேசிய அளவிலான போட்டி தேர்வு களில் தேர்ச்சிபெற முடியவில்லை என்ற குற்றச்சாட்டு, நீண்ட காலமாக உள்ளது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாணவர்களை தயார்படுத்த, பிளஸ் 1 வகுப்புக்கும், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இந்த ஆண்டு, முதல் முறையாக நடந்த பொது தேர்வில், வினாத்தாளில் பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகள் இடம்பெற்றன.

ஐ.ஐ.டி., நடத்தும், ஜே.இ.இ., மற்றும் மருத்துவ கவுன்சில் நடத்தும், 'நீட்' போன்ற நுழைவு தேர்வுகள் போன்று, பிளஸ் 1 பொது தேர்வில், வினாக்கள் கேட்கப்பட்டன. அதனால், பெரும்பாலான மாணவர்கள், பதில் எழுத திணறினர்.வினாக்கள் கடினமாக இருந்ததாக, பெற்றோரும், ஆசிரியர்களும் கவலை தெரிவித்தனர். அதனால், சலுகை மதிப்பெண் தேவை என்றும், கோரிக்கை எழுந்தது. ஆனால், தேர்வுத் துறை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில், பிளஸ் 1 தேர்வில், 91.3 சதவீதமாணவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர்.இது,எப்படி நிகழ்ந்தது என, ஆசிரியர்களும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

40 சதவீதத்துக்கும் மேல், மாணவர்களின்தேர்ச்சி பாதிக்குமோ என, விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள், அச்சத்தில் இருந்தனர். ஆனால், அனைத்துக்கும் நேர்மாறாக, தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது.இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:பிளஸ் 1 தேர்வு முறையும், வினாத்தாள் முறையும் மிக கடினமாக இருந்தது. ஆனால், பள்ளிக் கல்வித் துறையின் முயற்சி, இறுதியில் மாறி விட்டதாக தெரிகிறது. வழக்கம்போல், அரசியல் ரீதியாக, தேர்ச்சி சதவீதம் காட்டப்பட்டதோ என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.

விடை திருத்தத்தில் வராத மதிப்பெண், இறுதி பட்டியலில், அதிகம் வந்ததுபோல் தெரிகிறது.எனவே, மதிப்பெண்ணை பதிவு செய்வதில், 'டேட்டா என்ட்ரி' முறை பின்பற்றப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது.பொது தேர்வு முறையில், எத்தனை மாற்றங்கள் கொண்டு வந்தாலும், மதிப்பீடு முறையும், மதிப்பெண்ணை இறுதியாக பதிவு செய்யும் முறையும், வெளிப்படை தன்மையுடன் நடந்தால் மட்டுமே, மாணவர்களின் சரியான கல்வித் திறன் தெரிய வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர்

No comments :
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக டாக்டர் என்.ராஜேந்திரனைதமிழக கவர்னரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். என்.ராஜேந்திரன் அழகப்பா பல்கலைக்கழகத்தில் வரலாறு பேராசிரியராக பணி புரிந்தவர். இவர் ‘தமிழ்நாட்டில் தேசியம்’ மற்றும் ‘சுவதேசியம்’ ஆகிய 2 நூல்களை எழுதி இருக்கிறார்.27 ஆண்டுகள் கல்வித்துறையில் கற்பித்தல் மற்றும் நிர்வாகத்திறமையில் அனுபவம் பெற்றவர்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முதல்வர் மற்றும் இயக்குனராகவும், துறை தலைவராகவும் பணியாற்றி உள்ளார். பாரதிதாசன் பள்ளி நிர்வாகத்தின் நிறுவனர் ஆவார். இந்திய வரலாற்று ஆராய்ச்சி குழுவில் 2008 மற்றும் 2015-ம் ஆண்டு என 2 முறை உறுப்பினராக அங்கம் வகித்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட என்.ராஜேந்திரன் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டி ராஜ்பவனில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை 2018 - 2019 அறிவிப்புகள் - ALL OFFICIAL COPY PUBLISHED

No comments :

ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக், அரசு பள்ளிகளில் LKG, UKG - உட்பட இன்றைய சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

No comments :
*மொழி பாடங்கள் தாள் 1,  தாள்2 என்ற முறையை மாற்றி‌ ஒரே தாளாக தேர்வு நடத்த நடவடிக்கை.

*முதல்வரின் உத்தரவுபடி அரசுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு ரூ.9 கோடியில் பயோமெட்ரிக் முறை திட்டம் நிறைவேற்றப்படும்*

*ரூபாய் 9 கோடி செலவில் அரசுப் பள்ளி  ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக் எனப்படும் தொட்டுணர்வு கருவி செயல்படுத்தப்படும்.

பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொலைதூரத்தில் இல்லாமல் அருகில் உள்ள பள்ளிகளில் பணிமாறுதல் வழங்கப்படும்

*அரசு பள்ளிகளில் LKG, UKG  வகுப்புகளை துவக்க நடவடிக்கை.


பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு கிழியாத காகிதத்தில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்

அரசுப் பள்ளிகள் உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைக்கப்படும் என்றும், அரசுப் பள்ளிகளில் உள்ள நூலகங்கள் கணினி மயமாக்கப்பட்டு, வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்

*அரசு கேபிள் டிவியில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு பாடப்பிரிவுகளில்  காணொளிகாட்சிகள் ஒளிபரப்பப்படும்.




*துவக்கத்தில் இது ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்படும்.


*சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கோவை மாவட்டங்களில் நூலகங்களில்  வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.


*கன்னிமாரா நூலகம் புதுப்பிக்கப்படும்


சட்ட பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.


அரசு பள்ளிகளில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்க, முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய மேட்டூர் எம்எல்ஏ செம்மலை, பாடத்திட்ட மாற்றம், ரேங்கிங் முறையை மாற்றியது உள்ளிட்ட பல அம்சங்களில் பள்ளிக்கல்வித்துறை புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். அனைத்து பள்ளிகளும் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி இயங்குவதால், மெட்ரிக் பள்ளிகள் என்ற பெயரை, தனியார் சுயநிதி பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவான சட்டம் இயற்ற வல்லுநர் குழு அமைப்பு

No comments :
அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவான சட்டம் மற்றும் விதிகளை வகுத்திட மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் முன் வைக்கப்பட்ட பள்ளி கல்வி துறை கொள்கை விளக்கு குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு பொது பாடத்தின்படி மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் அனைத்தும் மாநில பள்ளிக்கல்வி பொதுப்பாட சட்டம் 2010-ன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 6 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கான கட்டணத்தை கல்வி கட்டணக் குழு நிர்ணயித்துள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட பள்ளியால் நிர்ணயிக்கப்ட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த ரூ.63,86,290 ரூபாயை மாணவர்களிடம் திரும்ப வழங்க கட்டண நிர்ணய குழு ஆணையிட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. 

ABL பாடமுறைக்கு மாற்றாக PILOT கல்வி முறை அமல்-வரும் கல்வி ஆண்டு முதலே அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த முடிவு

No comments :
Pedagogy method will implement to all primary schools from 2018-19 academic year.Some important points alternative (Pedagogy) methodology:

👉Tamil Nadu Govt will implement alternative method instead of ABL. This method is calling Pedagogy.

(Kuzhandai Neya Katral).
👉This method will implement 2 schools in each block level as a trial from January 2018.
👉Pedagogy method will implement to all primary schools from 2018-19 academic year.
👉1 to 3 std mingle (for Asst tr)
👉4 and 5 std mingle (for HM)
👉Alternative method will introduce. Name Pedagogy.
👉ABL cards not implement.
👉Text book, students work book and Teacher Guide will issue.
👉Low level black board,  kambi pandal, self attendance, Grouping, health chakra and whether chart will continue.
👉Each period 90 minutes only.
👉Daily 3 subjects will teach.

Period 1
9.30 to 11 am
Period 2
11.10 to 12.40
Period 3
2.00 pm to 3.30
👉Extra curricular and co curricular activities:
1.30 to 2.00 pm &3.40 to 4.10 pm.👉
👉Six groups reduced.  Only 4 groups.
👉QR code has in the text book.
👉Teacher scan the QR code, then video lesson will play in the mobile or tablet.
👉Many activities in the text book.
👉Teacher can teach each class separately.
👉But should give activity or written work to other class students.
👉More activity for bright students and minimum activity for slow learners in the text book and work book.
👉Students materials should display on the kambi pandal.
👉15 periods to a week.
👉All periods and subjects same to all classes in the school. Time table will design by Education Department.
In future student will evaluate through online with the help of tablet.
👉4 std No ABL.
👉4 and 5 std SALM methodology will implement.
👉Cards maybe use as  TLM.

11th RESULT 2018- COMPLETE OFFICIAL ANALYSIS PUBLISHED

No comments :

கோடை விடுமுறை முடிகிறது : ஜூன் 1ல் பள்ளிகள்திறப்பு

No comments :
கோடை விடுமுறை முடிந்து, நாளை மறுநாள், பள்ளிகள் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில், பள்ளி இறுதி தேர்வு மற்றும் பொது தேர்வுகள், ஏப்., 20ல் முடிந்தன. அடுத்த நாள் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

உத்தரவு :

ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு, மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளை போன்றே, ஏப்., மூன்றாவது வாரம் முதல், விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில், 41 நாட்கள் கோடை விடுமுறை, நாளை முடிவுக்கு வருகிறது. அனைத்து பள்ளிகளும், நாளை மறுநாள் திறக்கப்பட உள்ளன. அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும், ஜூன், 1 முதல் வகுப்புகளை நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி திறப்பு நாளில், மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு முடிவு : இந்த ஆண்டு முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது.அதேபோல், பள்ளி திறக்கும் நாளிலேயே, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட உள்ளன.

இணையதள கல்விக் கழகம் மூலம் இணையவழியில் கணினி தமிழ் பாடத் திட்டம்

No comments :
தமிழக சட்டசபையில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் மானியக் கோரிக்கை மீது நேற்று எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அதற்கு அந்தத் துறையின்அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் பதிலளித்துப் பேசினார்.

பின்னர் சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

ராமநாதபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பவியல் பூங்காக்களை உருவாக்க சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.நிதித்துறையில் போட்டி, புதுமை, உற்பத்தித் திறனை உருவாக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சென்னையில் நிதி தொழில்நுட்ப சிறப்பு மையம் அமைக்கப்படும்.பல்வேறு துறைகளின் திட்டங்களின் காட்சித் தோற்றத்திற்கு முன்முயற்சியாக முதலீட்டுத் திட்டமாக,முதல்அமைச்சர் முகப்பு பக்கம் (சி.எம்.டாஷ் போர்டு) உள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் அனைத்து முக்கிய துறைகளிலும் செயல் திறனை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் திறம்பட கண்காணிக்க இயலும்.எல்காட் இமார்கெட் மூலம் அரசுத் துறைகளுக்கு ஆன்லைன் வழியாக அனைத்து தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த வன்பொருள், மென்பொருள் சேவை வழங்கப்படும்.தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலம், தொழில்நுட்ப கருத்துக்கள வசதி அமைக்கப்படும். இணையட் வழியில் அனைத்து இசேவைகளையும் அளிப்பதற்கு, கூடுதல் ஆன்லைன் சேவையை வழங்க வழிவகை செய்யப்படும்.

தமிழ் மொழியை கணினிக்கு கொண்டு செல்லும் கட்டாயம் உள்ளது. எனவே, கணினித் தமிழ் பாடத்திட்டத்தை பட்டயப்படிப்பாக இணைய வழியில் இணையதள கல்விக்கழகம் பயிற்றுவிக்க உள்ளது.அரசுத் துறைகளுக்கு தேவைப்படும் பட்சத்தில், தகவல் தொழில்நுட்ப பணியாளர் தொகுப்பில் இருந்து பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். அரசுத் துறைகளின் இணையதளங்கள் உரிய கால இடைவெளியில் பாதுகாப்பு தணிக்கை செய்யப்படும்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சந்தாதாரர்கள், கூடுதலாகஓ.டி.டி. (ஓவர் த டாப்) சேவை மூலம், அவர்கள் விரும்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளையும் உலகின் எந்த பாகத்தில் இருந்து, கிளவுட் கம்ப்யூட்டிங், செல்போன், டாப்லெட், கம்ப்யூட்டர், லேப்-டாப் போன்ற பல்திரைஉபகரணங்கள் மூலம் கண்டுகளிக்கும் வசதிவழங்கப்படும். இதன் தொடக்கத்தில் 50 முதல் 100 தொலைக்காட்சி சேனல்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கீகாரமின்மையால் மூடப்பட்ட தனியார் நர்சரி பள்ளிகள் பட்டியல்

No comments :

பிளஸ் 2வில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

No comments :
மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கு பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சிப்பெற்ற  மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, சென்னையில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவபல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி நிருபர்களை சந்தித்து கூறியதாவது: 

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் கடந்த ஆண்டுமுதல் தொடங்கப்பட்டுள்ளது. பிஎஸ்சியில் 20 பட்டப்படிப்புகளும், 16 டிப்ளமோ படிப்புகளும் உள்ளது. வகுப்புகள் பல்கலைக்கழகத்தில் நடக்கும். இதற்கான பயிற்சிகள் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நடைபெறும்.பிஎஸ்சி படிப்புகள் 4 வருடங்கள். இதில், 3 வருடங்கள் மாணவ, மாணவிகள் படிப்பார்கள். ஒரு வருடம் பயிற்சியில்ஈடுபடுவார்கள். டிப்ளமோவில் 2 வருடங்கள் படிப்பார்கள். 6 மாதம் பயிற்சியில் ஈடுபடு வார்கள்.பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிப்பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகளுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த படிப்புகளை படிக்க ரூ. 18 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.

கடந்தாண்டு 10 படிப்பு களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. 200 இடங்களில் 32 இடங்கள் மட்டுமே நிரம்பியது. எனவே, இந்தாண்டு மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, பல்கலைகழகத்தின் பதிவாளர் பாலசுப்ரமணி உடனிருந்தார்.

Wednesday, 30 May 2018

புதிய பாடநூலில் QR code செயல்பட தொடங்கியது

No comments :
தமிழக அரசு புதிதாக வெளியிட்டுள்ள பாடநூல்களில் QR code எனப்படும்விரைவுக்குறியீடு முறையில் மொபைல் மற்றும் டேப் கொண்டு பாடக்கருத்துகளை மாணவர்கள் எளிமையாக புரிந்து
கொள்ளும்வகையில் பாடக்கருத்து அறிமுகம், மதிப்பீடு மற்றும் கணினி செயல்பாடு (ICT) என பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 6 ஆம் வகுப்பிற்கான கணினி சார் வளங்கல் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் அதனை அனைவரும் பயன்படுத்த இயலும்.மேலும் 1 மற்றும் 9 பதினொன்றாம் வகுப்பிற்கான வளங்கள் விரைவில் ஓரிரு நாட்களில் பதிவேற்றம் செய்யப்படும் எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிளஸ் 1 பாடப்பிரிவுகள் பள்ளிகளில் நிறுத்த தடை

No comments :
மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1 பாடப்பிரிவுகளில், மாணவர்களை சேர்க்க வேண்டும் என்றும், எந்த பாடப்பிரிவையும் நிறுத்தக் கூடாது என்றும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றி, மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள், எந்த பிரிவாக இருந்தாலும், அவர்களை, பொது பிரிவினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.பொது பட்டியலில் வர தகுதியில்லாத, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களையே, இட ஒதுக்கீட்டில் சேர்க்க வேண்டும். இதில், எந்த முறைகேடும் நடக்கக் கூடாதுஎன, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும், பிளஸ் 1ல், மாணவர்கள் எண்ணிக்கை குறைவு எனக்கூறி, எந்த பாடப்பிரிவையும் நிறுத்தக் கூடாது என்று, பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் பிறப்பித்துள்ள உத்தரவில், 'தற்போது, பிளஸ் 1 வகுப்பில், நடைமுறையில் உள்ள, எந்த பாடப்பிரிவையும், வகுப்பையும் நிறுத்தக் கூடாது. 'முழு அளவில் மாணவர்களை சேர்க்க வேண்டும். அதிக மாணவர்கள் இருந்தால், கூடுதலாக, ஒரு பிரிவு துவங்குவது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், தலைமை ஆசிரியர்களும் ஆலோசிக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.

52 புதிய கல்வி மாவட்டங்கள் உதயமாகின்றன!

No comments :
மாநிலத்தில் 52 புதிய கல்வி மாவட்டங்கள் செயல்பட அரசாணை வெளியிட்டு முதன்மைச்செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.கல்வி துறையில் அரசு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, மாவட்ட கல்வி அலுவலர் என்ற பெயரில் செயல்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், ஆங்கிலோ இந்திய பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், மாவட்ட வயது வந்தோர் கல்வி அலுவலர் அலுவலகம் ஆகியவற்றிற்கு அலுவலர் மற்றும் பணியாளர் பணியிடங்கள்அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட கல்வி அலுவலங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது.

மாநிலத்தில் உள்ள 32 மாவட்ட தொடக்க கல்வி அலுவலங்கள், 3 முறைசாரா மாவட்ட கல்வி அலுவலகங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலங்கள் என 52 அலுவலகங்கள் கலைக்கப்பட்டு, 52 புதிய மாவட்ட கல்விஅலுவலகங்கள் துவக்க அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

கல்வித்துறையில் 7 ஆயிரம் அலைபேசி இணைப்புகள் மீண்டும் தனியாருக்கே!

No comments :
கல்வித்துறையில் அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை பயன்படுத்தும் ஏழாயிரம் சி.யு.ஜி., அலைபேசி இணைப்புக்கான அனுமதியை மீண்டும் தனியார் நிறுவனமே கைப்பற்றியுள்ளது.

இத்துறை செயலாளர் முதல் அலுவலக கண்காணிப்பாளர், திட்டப் பணி ஆசிரியர் பயிற்றுனர்கள் வரை 7 ஆயிரம் பேர் ஏர்செல் நிறுவன சி.யு.ஜி., அலைபேசி இணைப்பில் இருந்தனர்.அது மூடப்பட்டதும் இந்த இணைப்புக்களை பெற தனியார் நிறுவனங்களிடையே போட்டி ஏற்பட்டது. பி.எஸ்.என்.எல்., நிறுவனமும்பேச்சு நடத்தியது. ஆனால் தனியார் நிறுவனம் ஒன்றே மீண்டும் கைப்பற்றி, அதற்கான 'சிம்' கார்டுகளும் வழங்கப்பட்டு விட்டது.பி.எஸ்.என்.எல்.,ஐ விட இந்த இணைப்பில் கட்டணமும் அதிகம், சலுகைகளும் குறைவு, என தலைமையாசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அவர்கள் கூறியது: தற்போதைய திட்டத்தின்படிமாதக் கட்டணம் 189 ரூபாய். 5 ஜி.பி., டேட்டா வழங்கப்படுகிறது. ஆனால் பி.எஸ்.என்.எல்., திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு 399 ரூபாய் கட்டணம். ஒருநாளைக்கு ஒன்றரை ஜி.பி., பயன்பாடு வசதி உள்ளது. மாதம் 133 ரூபாய் தான்.

இதை விட்டு அதிக கட்டணம், குறைவான சலுகையுள்ள தனியார் நிறுவனத்தை ஏன் தேர்வு செய்தார்கள் என தெரியவில்லை. பி.எஸ்.என்.எல்.,க்கு இணைப்பை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

பள்ளிக்கல்வி - புதிய மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் - அரசாணை வெளியீடு ( G.O Ms 108 - Date 28.05.2018)

No comments :

10th - Supplementary Exam - June 2018 Public Exam - Time Table Published

No comments :
SSLC - சிறப்பு துணைத்தேர்வு எப்போது விண்ணப்பிக்கலாம்? அரசு அறிவிப்பு: தேர்வு அட்டவணை வெளியீடு

12th - Supplementary Exam - June 2018 Public Exam - Time Table Published

No comments :
+2 சிறப்பு துணைத்தேர்வு எப்போது விண்ணப்பிக்கலாம்? அரசுஅறிவிப்பு: தேர்வு அட்டவணை வெளியீடு




'பிளஸ் 1ல் இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும்'

No comments :
பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில், பாடப்பிரிவு வாரியாக, இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும்' என, கல்வித்துறை இயக்குனர், இளங்கோ உத்தரவிட்டுள்ளார்.

பிளஸ் 1 வகுப்பில், முதல், இரண்டாவது, மூன்றாவது குரூப்களில் சேர, மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. சில பள்ளிகளில், மாணவர் விரும்பிய குரூப்வழங்க, நன்கொடை என்ற பெயரில் வசூல் வேட்டையும் நடத்துகின்றனர்.

இத்தவறு நடக்கக்கூடாது என்பதற்காக, கல்வித்துறை இயக்குனர், பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றிக்கையில், 'மாணவர் சேர்க்கையின் போது, இடஒதுக்கீட்டு விதிகளை பாடப்பிரிவு வாரியாக, அனைத்து பள்ளிகளும் கடைபிடிக்கவேண்டும்' என, அறிவுறுத்தியுள்ளார்.

அரசு பள்ளிகளை மூடும் முடிவு தற்போது இல்லை. செப்டம்பர் மாதத்திற்கு பிறகு முடிவு எடுக்கப்படும்.-அமைச்சர் செங்கோட்டையன்

No comments :
தற்போது அரசு பள்ளிகளை மூடும் முடிவுஇல்லை. செப்டம்பர் மாதத்திற்கு பிறகு முடிவு எடுக்கப்படும்.புதிய பாடத்திட்டத்தில் பிழைகள் இருந்தது. தற்போது, வெளியிடப்படும் புத்தகத்தில் எந்த பிழைகளும் இல்லாமல்சரி செய்யப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டத்தை பார்த்து சிபிஎஸ்இ பள்ளிகளே வியந்து போய் உள்ளன. அதைப்போல் சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டுமேநீட் தேர்வில் தேர்ச்சி அடைகிறார்கள் என்று குற்றச்சாட்டு இருந்தது. ஆனால், இந்த வருடம் அரசு பள்ளி மாணவர்களுக்குநீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் மருத்துவர்கள் ஆவார்கள்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

1, 6, 9 வகுப்புகளுக்கு புதிய பாட புத்தகத்தின் விலை அறிவிப்பு

No comments :
*1, 6, 9-ஆம் வகுப்புகளுக்கு உரிய புதிய பாட புத்தகத்தின்விலையை தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் அறிவித்துள்ளது

*புதிய பாடத் திட்டத்தின்படி தயார் செய்யப்பட்டுள்ள 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்குரிய விலையில்லா பாட புத்தகங்கள் பள்ளி திறக்கும் அன்றே மாணவர்களுக்கு வழங்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

*1, 6, 9 வகுப்புகளுக்கான பாட புத்தக விற்பனை கடந்த 24-ஆம் தேதி முதல் தொடங்கியது. 11-ஆம் வகுப்புகளுக்கான பாட புத்தகங்களின் விற்பனை, ஜூன் 2-ஆவது வாரத்தில் பள்ளிகள் தொடங்கும் முன்பு தொடங்கப்பட உள்ளது

*இந்த நிலையில், புதிய பாட புத்தகங்களுக்கான விலையை தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலை விவரம் வருமாறு

*1-ஆம் வகுப்பு முதல் பருவத்துக்கான தொகுதி 1(தமிழ், ஆங்கிலம்) ரூ.80, முதல் பருவம் தொகுதி 2 (கணக்கு, சுற்றுச்சூழல் அறிவியல்) ரூ.70, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தமிழ் புத்தகம் ரூ.100 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது

*இதே போன்று 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத்துக்கான தொகுதி 1(தமிழ், ஆங்கிலம்), தொகுதி 2-இல் கணக்கு ஆகிய புத்தகங்கள் தலா ரூ.90, தொகுதி 3-இல் (அறிவியல், சமூக அறிவியல்) ரூ.120, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தமிழ் புத்தகம் ரூ.120 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

*9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத்துக்கான தொகுதி 1(தமிழ், ஆங்கிலம்) ரூ.120, தொகுதி 2 கணக்கு புத்தகம் ரூ.100, தொகுதி 3-இல் (அறிவியல் ) ரூ.130, தொகுதி 4-இல் சமூக அறிவியல் புத்தகம் ரூ.150, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தமிழ் புத்தகம் ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

*11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாட புத்தகத்தின் தலைப்புகள் இறுதியாக முடிவு எடுக்கப்படாததால் விலையை தற்போது அறிவிக்கவில்லை

*இதற்கான விலை விரைவில் அறிவிக்கப்படும். 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் புதிய பாட புத்தகத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளில் உளவியல் ஆலோசனை வழங்க ஆசிரியர், ஆசிரியைகளை பொறுப்பாளர்களாக நியமிக்க கல்வித் துறை அறிவுறுத்தல்

No comments :
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்துவகைப் பள்ளிகளிலும் மாணவர், மாணவிகளின்உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் பணி மூப்பு ஆசிரியர், ஆசிரியைகளை பொறுப்பாசிரியர்களாக நியமிக்க வேண்டுமென கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்விஇயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பள்ளிகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான பிரச்னைகளை கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் மாநில அளவில் குழு அமைத்து செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதன்படி, பள்ளிக் கல்வி இயக்குநரை தலைவராகவும், நாட்டு நலப்பணித் திட்ட இணை இயக்குநரை உறுப்பினர்-செயலராகவும், முதன்மைக் கல்வி அலுவலர்களை உறுப்பினர்களாகவும் கொண்டு மாநில அளவிலான குழு அரசால் அமைக்கப்பட்டுள்ளது.இதில் உளவியல் மருத்துவர்கள், கல்வியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

உளவியல் பொறுப்பாசிரியர்:

ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து அதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்னைகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. இன்றைய சூழலில் பள்ளி மாணவர்கள் சிலர் தேர்வு பயம், வளர் இளம் பருவ பிரச்னைகள், மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் பிரச்னைகளால் எளிதில் பாதிக்கப்பட்டு எதிர்மறையான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மாணவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் பணிமூப்பு மற்றும் தகுதி, திறமை வாய்ந்த ஓர் ஆண் ஆசிரியர், ஒரு பெண் ஆசிரியர் உளவியல் ஆலோசனை வழங்க பொறுப்பாசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும். ஆண் ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், பெண் ஆசிரியர்கள் மாணவிகளுக்கும் தேவையின் அடிப்படையில் உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும். இந்த பொறுப்பாசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவது சார்ந்த பயிற்சிகளை வழங்க வேண்டும்.

அனைத்து வகை பள்ளிகளிலும்...:

இந்த உளவியல் பொறுப்பாசிரியர்கள் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் நியமிக்கப்பட வேண்டும். பள்ளிகளில் பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள விவரங்களை ஆய்வு அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதற்கென பள்ளிகளில் தனியாக பதிவேடு பராமரிக்க வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குஇரண்டு புதிய பாடங்கள் அறிமுகம்

No comments :
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இந்தஆண்டுமுதல் கணினி தொடர்பான இரண்டு புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.தமிழக பள்ளி கல்வியில், முதல் கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், தொழிற்கல்வி குரூப் மாணவர்களுக்கும், "ஆர்ட்ஸ் குரூப்' மாணவர்களுக்கும், புதிதாக இரண்டு பாடங்கள் சேர்க்கப்பட உள்ளன.

இந்த ஆண்டே, இந்தப் புதிய கணினி பாடங்கள், அமலுக்கு வர உள்ளன. அதாவது,"கம்யூட்டர் சயின்ஸ்' பிரிவுக்கு,"கணினி அறிவியல்' என்ற பாடம் தொடர்ந்து நடத்தப்படும்.ஆனால், வரலாறு, பொருளியல், வணிகக் கணிதம் போன்ற, ஆர்ட்ஸ் பாடப்பிரிவினருக்கு, கணினி பயன்பாடுகள் பற்றிய, 'கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்' என்ற பாடம் புதிதாகச் சேர்க்கப்படுகிறது.அதேபோன்று அனைத்து வகை தொழிற்கல்வி பிரிவுகளுக்கும் "கணினி தொழில்நுட்பம்' என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய பாடங்கள் இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கும், அடுத்த ஆண்டு முதல் பிளஸ் 2 வகுப்புக்கும் அறிமுகம் செய்யப்படுகின்றன.இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வி இயக்குநர், இளங்கோவன் பிறப்பித்துள்ளார்.

இந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் போன் கட்டாயம்

No comments :
இந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் போன் கட்டாயமாக்கி அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சுற்றரிக்கை அனுப்பியுள்ளது.

1, 6, 9 , 11 ம் வகுப்புகளுக்கு QR code பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. QR code ஐ ஸ்கேன் செய்து பாடங்களை நடத்த ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் போன் தேவைப்படுகிறது. 

செயல்திறனுக்கு ஏற்ப இனி அரசு பள்ளிகளுக்குநிதி ஒதுக்கீடு

No comments :
நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களில் இயங்கும் அரசுப் பள்ளிகளின் செயல்திறனுக்கு ஏற்ப இனி மத்திய அரசு நிதி கிடைக்க உள்ளது

*நடப்பு 2018-19-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் அரசுப் பள்ளிகளுக்கு ரூ.33,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

*இதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகள் தங்கள்தேவைக்கு ஏற்ப கேட்கும் போது பிரித்து வழங்கப்படும். இந்த நிதியுடன் ‘சமக்ரா சிக் ஷா’ திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

*ஏற்கெனவே அமலில் இருந்த சர்வ சிக் ஷா அபியான், ராஷ்ட்ரிய மாத்யமிக் சிக் ஷா அபியான் மற்றும் ஆசிரியர்கள் கல்வி திட்டம் ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைத்து இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.*இந்த புதிய திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளின் மாணவர், ஆசிரியர் சதவிதம், மாணவர் தேர்ச்சி உள்ளிட்ட பள்ளியின் வளர்ச்சிக்காக எடுக்கப்படும் பல்வேறு வகைசெயல்திறன்களின் அடிப்படையில் இந்தத் தொகை பிரித்துவழங்கப்பட உள்ளது. குறிப்பாக கிராமப்புற பள்ளிகள் இந்த திட்டத்தால் அதிகம் பலன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது

*இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள்  கூறும்போது, “இதுபோன்ற புதிய திட்டங்களை அமல்படுத்துவதற்கு முன்பு, நாடு முழுவதிலும் உள்ள மாநில, யூனியன் பிரதேசஅரசுகளுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம்

*ஆனால், இந்தத் திட்டத்துக்கு ஆலோசனை எதுவும் நடத்தவில்லை. சிறந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டஇந்த திட்டத்தால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக பலன் கிடைக்கும்” என்றார்

*புதிய திட்டத்தின்படி எந்த செயல்திறனுக்கு எவ்வளவுதொகை ஒதுக்கப்படும் என்ற விவரம் மத்திய கல்வி அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது

*உதாரணமாக நூலக வளர்ச்சிக்கு மாதம் ரூ.5000 முதல் ரூ.20,000, விளையாட்டுப் பயிற்சிக்கு ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட உள்ள இந்த விவரங்களை கண்டறிந்து அரசுப் பள்ளிகள் தங்கள் செயல்திறனை அதிகரிக்கலாம்.

கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - டெக்னாலஜி பாடங்கள் மேல்நிலை தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் கணினி பாடம் சேர்ப்பு

No comments :
தமிழகத்தில் மேல்நிலை தொழிற்கல்வி மற்றும் கலை பாட பிரிவுகளில் கணினி பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் இதனை கடைபிடிக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

1 முதல் 12ம் வகுப்பு வரையான பாட திட்டத்தை மாற்றும் பணியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இப்பாட திட்டம் தரமானதாகவும், சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர கல்வி வாரியங்களின் பாட திட்டத்திற்கு மேலானதாகவும், அதே வேளையில் மொழிப்பாடங்கள், சமூக அறிவியல் பாடங்களில் தமிழகத்தின் மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்கும். தமிழகத்தில் 12 வகையான தொழில்கல்வி பாடங்கள் மேல்நிலை வகுப்புகளில் கற்பிக்கப்பட்டு வருகிறது. தொழிற்கல்வி பிரிவு மாணவர்கள் உயர் கல்விக்கு செல்லவும், வேலைவாய்ப்பு பெறவும் வாய்ப்புகள் உள்ளன. இப்பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் வளர்ந்து வரும் தொழில்வளர்ச்சி சூழலுக்கு ஏற்ற வகையில் தொழிற்கல்விக்கான பாடங்கள் மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள தொழிற்கல்வி மற்றும் கலைபிரிவு முதன்மை பாடங்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதலும் வழங்கப்பட்டுவிட்டது.

பாட மாற்ற விபரங்கள்:

* கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) என்ற பாட பிரிவு மட்டும் இருந்த நிலையில் இப்பாடம் வரும் கல்வியாண்டு முதல் மூன்று வகையாக  அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) என்பது கணினி பயன்பாடுகள் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) என்ற முதன்மை பாடமாக கொண்டு வணிகவியல்- கணக்குபதிவியல்- பொருளியல், வரலாறு- புவியியல்- பொருளியல், கணக்குபதிவியலும் தணிக்கையியலும் என அறிமுகமாகிறது. வணிகவியல் பாடத்தில் டேலி முதலியனவும் இணைக்கப்படுகிறது.

* 10 தொழிற்கல்வி முதன்மை பாடங்களிலும் மூன்றாவது கருத்தியல் பாடமாக கணினி தொழில்நுட்பம் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

* கணக்கு பதிவியலும், தணிக்கையியலும் என்ற தொழிற்கல்வி பிரிவில் முதன்மை பாடமாக கணினி பயன்பாடுகள் என்ற பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

* மேல்நிலை கல்வி தொழிற்கல்வியான கணக்குபதிவியலும் தணிக்கையியலும் என்ற பிரிவில் மூன்று முதன்மை பாடங்களான வணிகவியல், கணக்குபதிவியல், கணினி பயன்பாடுகள் ஆகியவைகள் கருத்தியல் பாடமாகவும், நான்காவது முதன்மை பாடமான தணிக்கையியல் செய்முறை பாடமாகவும் சேர்க்கப்பட்டுள்ளது.

* அலுவலக செயலாண்மை என்ற பாடப்பிரிவு அலுவலக மேலாண்மை செயலியல் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மூன்று முதன்மை பாடங்களான வணிகவியல், கணக்குபதிவியியல், அலுவலக மேலாண்மை செயலியல் ஆகியவைகள் கருத்தியல் பாடங்களாகவும், நான்காவது முதன்மை பாடமாக தட்டச்சு கணினி பயன்பாடுகளும் செய்முறை பாடமாக சேர்க்கப்படுகிறது.

* புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள கணினி பயன்பாடு மற்றும் கணினி தொழில்நுட்ப பாடங்கள் கருத்தியல் மற்றும் செய்முறை தேர்வு பாடங்களாக உள்ளதால் கணினி அறிவியல் பாடத்திற்கு மதிப்பெண் வழங்குவது போன்ற நடைமுறையே இதற்கும் பின்பற்றப்படும்.

வரும் கல்வியாண்டுக்கு பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடைபெறுகின்ற நிலையில் மாணவர்கள் நலன்கருதி தொழிற்கல்வி மற்றும் கலை பிரிவுகளில் மாற்றி அமைக்கப்பட்ட முதன்மை பாடவிபரங்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற கல்வித்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.

கணினி தொழில்நுட்ப பாடம் இணைக்கப்பட்டு
பெயர் மாற்றப்பட்ட தொழிற்கல்வி பாடபிரிவுகள்
1. பொது இயந்திரவியல்-அடிப்படை இயந்திரவியல்
2. மின் இயந்திரங்களும் சாதனங்களும்-அடிப்படை மின் பொறியியல்
3. மின்னணு சாதனங்கள்- அடிப்படை மின்னணு பொறியியல்
4. கட்டட பட வரைவாளர்- அடிப்படை கட்டட பொறியியல்
5. ஆட்டோ மெக்கானிக்-அடிப்படை தானியங்கி ஊர்தி பொறியியல்
6. நெசவியல் தொழில்நுட்பம்- நெசவியல் தொழில்நுட்பம்
7. செவிலியம்-செவிலியம்
8. துணிகளும் ஆடைவடிவமைப்பும்-நெசவியலும் ஆடை வடிவமைப்பும்.
9. உணவு மேலாண்மையும் குழந்தை நலனும்-உணவக மேலாண்மை.
10. வேளாண்மை செயல்முறைகள்- வேளாண் அறிவியல்.

பள்ளி கல்வித்துறை புது உத்தரவு இனி ஸ்மார்ட் போன் இல்லைன்னா நடவடிக்கை: புதிய பாடத்திட்டத்தால் எல்லாம் தலைகீழ்

No comments :
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, மாணவர்களின் மனநிலைக்கு ஏற்ப, கற்றல், கற்பித்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. முப்பரிமாண படங்கள், செல்போனில் ஸ்கேன் செய்து, அதுதொடர்பான கூடுதல் தகவல்களை பெறும் கியூஆர் குறியீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு ஆசிரியரும் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. கடந்த ஆண்டுகளில், பள்ளிகளில் வேலை நேரங்களில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஆனால், இனி புதிய பாடத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு அரசு பள்ளி ஆசிரியரும் கட்டாயம் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மீறினால், மெமோ வழங்கப்பட்டு, சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த காலத்தில் பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தியதற்காக மெமோ வழங்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


 மாநிலம் முழுவதும் பல ஆயிரம் ஆசிரியர்களுக்கு மெமோ வழங்கப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது புதிய பாடத்திட்டத்தின்கீழ், இந்த நடவடிக்கை தலைகீழாக மாறிவிட்டது. கட்டாயம் ஸ்மார்ட்போன் கொண்டுவர வேண்டும் என்ற சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பள்ளி கல்வித்துறை உயரதிகாரிகள் கூறியதாவது: காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றம் அவசியமாகிறது. தொழில்நுட்ப பயன்பாடு காரணமாக இனி அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகிறது. ஸ்மார்ட்போன் கொண்டுவராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. 1, 6, 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தில் புத்தகத்தில் உள்ள தகவல்கள் அல்லாமல் இணையதளத்தில் உள்ள தகவல்களையும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வசதியாக QR CODE (விரைவு குறியீடு) இருக்கும். ஸ்மார்ட் போன் மூலம் QR கோடு ஸ்கேன் செய்தால் இணையத்தில் இருந்து கூடுதல் தகவல்களை பெற்று செல்போன், லேப்டாப் அல்லது ஸ்மார்ட் கிளாஸ் மூலம் மாணவர்களுக்கு விளக்கி கூற வேண்டும்.  இந்த வசதியை பெற, ஒவ்வொரு ஆசிரியரும் பள்ளிக்கு வரும்போது ஸ்மார்ட் போன் கொண்டு வரவேண்டும். வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளில் ஸ்மார்ட் போன் கொண்டுவராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆன்லைனில் புதிய பாட புத்தகங்கள் வரும், 31ம் தேதி முதல் பார்க்கலாம்

No comments :
'தமிழக அரசின், புதிய பாடத்திட்ட புத்தகங்கள், வரும், 31ம் தேதி, ஆன்லைனில் வெளியிடப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், ஒன்று முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.

அதனால், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, வரும் கல்வி ஆண்டில், புதிய பாடப்புத்தகங்கள் அறிமுகமாகின்றன. இந்த பாடப்புத்தகங்களின் விற்பனை, துவங்கியுள்ளது. இதில், பிளஸ் 1 தவிர, மற்ற வகுப்புகளுக்கான புத்தகங்கள் விற்கப்படுகின்றன.மொத்தமாக ஆர்டர் செய்த, தனியார் பள்ளிகளுக்கும் புத்தகங்கள் அனுப்பப்பட்டு உள்ளதாக, பாடநுால் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை நுங்கம்பாக்கம், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, தமிழ்நாடு பாடநுால் கழக விற்பனை மையத்திலும், அண்ணா நுாலக விற்பனை மையத்திலும், புத்தக விற்பனை துவங்கியுள்ளது. இந்த மையங்களில், பெற்றோர் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. வரும் நாட்களில் அதிகரிக்கும் என, தெரிகிறது.

இதற்கிடையில், புதிய பாடத்திட்ட புத்தகங்கள் அனைத்தும், வரும், 31ம் தேதி, தமிழ்நாடு பாடநுால் கழகத்தின், http://www.textbooksonline.tn.nic.in/ என்ற, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பொதுமக்கள் பார்த்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரம்! புதிய சீர்திருத்தங்களை அமல்படுத்த யு.ஜி.சி., வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்க முடிவு

No comments :
வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கும்வகையில், வரும், 2022க்குள் பல்வேறு சீர்திருத்தங்களை செய்ய, யு.ஜி.சி., எனப்படும், பல்கலைமானியக் குழு திட்டமிட்டுள்ளது.

தங்களிடம் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களில், குறைந்தபட்சம், 50 சதவீதம் பேர், வேலை அல்லது சுய வேலை வாய்ப்பு பெறுவதைஉறுதி செய்யும்படி,உயர் நிலை கல்வி மையங்களுக்கு, யு.ஜி.சி., உத்தரவிடவுள்ளது.புதிய,சீர்திருத்தங்களை,அமல்படுத்த,யு.ஜி.சி.,  தீவிரம்! வேலைவாய்ப்புக்கு,முன்னுரிமை,அளிக்க,முடிவுஆண்டுதோறும், உயர் கல்வி மையங்களில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், வேலை கிடைக்காமல் திண்டாடிவருகின்றனர். நிறுவனங்கள் எதிர்பார்க்கும் வகையில் போதிய திறமை இன்மை உள்ளிட்ட பல காரணங்களால், வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.இந்த நிலையை மாற்றும் நோக்கில், பல சீர்திருத்தங்களை செய்ய, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழு திட்டமிட்டுள்ளது.சமீபத்தில், யு.ஜி.சி., நிர்வாகிகள் கூட்டத்தில், ஐந்து முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்து, ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இது பற்றி, யு.ஜி.சி., வட்டாரங்கள் கூறியதாவது:அனைத்து உயர் கல்வி மையங் களிலும், மாணவர்களின் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றை இலக்காக வைத்து, சீர்திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. இதன்படி, உயர் கல்வி மையங்களில் பயிலும் மாணவர் களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் வகையில், அவர்களை, எல்லா வகையிலும் திறன் பெற்றவர் களாக உருவாக்க, பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.சமூகத்துடனும், தொழில் நிறுவனங்களுடனும், மாணவர்களுக்கு சிறப்பான வகையில் தொடர்பு இருக்க வேண்டும்.உயர் கல்வி மையங்களில் பயின்று தேர்ச்சி பெறும் மாணவர்களில், குறைந்த பட்சம், 50 சதவீதம் பேருக்கு நிறுவனங் களில் வேலைவாய்ப்பு அல்லது சுய வேலைவாய்ப்பு கிடைப்பதை, அந்த மையங்கள் உறுதி செய்ய வேண்டும்.மாணவர்களில், குறைந்தபட்சம், மூன்றில் இரு பங்கினர், அவர்கள் படிக்கும் போதே, சமூகத்துக்கு பயனுள்ள நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில், கல்வி மையங்கள் செயலாற்ற வேண்டும். இதற்கான உத்தரவுகளை, உயர் கல்வி மையங்களுக்கு, யு.ஜி.சி., பிறப்பிக்கும்.உயர் கல்வி மையங்கள், தலா, ஐந்து கிராமங்களை தத்தெடுக்க வேண்டும்; அந்த கல்வி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளை சார்ந்த மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும்.உயர் கல்வி மையங்களில் பயிலும் மாணவர்களில்,குறைந்தபட்சம், 75 சதவீதம் பேருக்கு, தகவல் தொடர்பு, தலைமைப் பண்பு, குழுவுடன் சேர்ந்து பணியாற்றுதல், நேரத்தை சிறப்பாக பயன் படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களை கட்டாயம் கற்றுத்தர வேண்டும்.உயர் கல்வி மையங்களில் தேர்ச்சி பெற்று வெளியேறும் ஒவ்வொரு மாணவரின், கற்றல் திறனை மதிப்பீடு செய்யும் சிறப்பு சோதனை களை, அக்கல்வி மையங்கள் நடத்த வேண்டும். அந்த மாணவர், படிப்பை முடித்த பின், அவரது முன்னேற்றத்தை, சம்பந்தப்பட்ட கல்வி மையம் கண்காணித்து உதவ வேண்டும். இவ்வாறு, யு.ஜி.சி., வட்டாரங்கள் கூறின.தர மதிப்பீடு அவசியம்!தன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள உயர் கல்வி மையங்கள் அனைத்தும், 2022க்குள், என்.ஏ. ஏ.சி., எனப்படும், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலிடம், குறைந்தபட்சம், 2.5 தர மதிப்பீட்டு புள்ளிகளையாவது பெற வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதிக்க, யு.ஜி.சி., ஆலோசித்து வருகிறது.

அங்கீகாரம் பெறாத கல்வி மையங்களுக்கு தக்க ஆலோசனைகள் வழங்கி, அவற்றை, 2022க்குள் அங்கீகாரம் பெற்றவையாக மாற்றவும், யு.ஜி.சி., திட்ட மிட்டு உள்ளது.உயர் கல்வி மையங்களில்பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அவர்களின் துறைகளில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள் தொடர்பான விஷயங்களை கற்றுத் தரவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

புதிய கற்றல் முறையின் படிநிலைகள்!

No comments :
மதிப்பீடு செயல் 90 நிமிடம் அதில் 30 முதல் 45 நிமிடம் மதிப்பீடு பிறகு மாணவர்கள் நிலைக்கு ஏற்ப பயிற்சிபுத்தகத்தில் உள்ள வளப்படுத்துதல் அல்லது மேம்படுத்துதல் செயல்பாடுகள் செய்தல்!!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் M.Sc. Marine-Biology(5 years) படிக்க வாய்ப்பு

No comments :

New DEO Office Lists & Contact Numbers 2018

No comments :

Saturday, 26 May 2018

ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்து 28ம் தேதி பேச்சுவார்த்தை

No comments :
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பாக வருகிற 28ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைக்கப்பட்டுள்ளனர்.
  ஊதிய முரண்பாடுகளை களைய நிதித்துறையில் அரசு செயலாளராக உள்ள (செலவினம்) எம்.ஏ.சித்திக் தலைமையில் தமிழக அரசினால் ஒரு நபர் குழு மே முதல்வாரம் அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் சங்கம், ஓய்வூதியதாரர்கள் சங்கம் சார்பில் இந்த குழுவிடம் மனு அளித்துள்ளனர்.

மனுவை பெற்றுக் கொண்ட குழுவினர், மே 28ம் தேதி (நாளை மறுதினம்) காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் சந்திக்க வரும்படி அனைத்து சங்கங்களுக்கும் தனித்தனியாக பதில் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். அப்படி, வரும்போது சங்கம் சார்பில் 5 பேர் மட்டுமே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு

No comments :
அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். இதுவரை 1லட்சத்து 12 ஆயிரத்து 959 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.
ஆன்லைன் வசதி இல்லாத மாணவர்கள் உதவி மையங்களை நாடலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 10 சதவீத விண்ணப்பங்கள் தான் உதவி மையங்கள் மூலம் வந்துள்ளன.

என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க மே 30–ந்தேதி கடைசி நாளாக இருந்தது. பின்னா் அண்ணா பல்கலைக்கழகம் என்ஜினீயரிங்  ஆன்லைனில் விண்ணப்பிக்க 3 நாள் நீடித்துள்ளது.இந்நிலையில் 3 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளதால் இந்த அவகாசம் நீட்டிப்பு செய்ததாக தெரிகிறது. அதனால்  மே.30 ஆம் தேதியுடன் அவகாசம் முடிவிருந்த நிலையில் ஜூன் 2 வரை அவகாசம் நீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழம்.

நீட் தேர்வு கீஆன்சர் வெளியீடு மாற்றம் இருந்தால் 27க்குள் விண்ணப்பிக்கலாம்

No comments :
அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வின் விடைக் குறியீட்டை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டது.மாணவர்கள் தங்கள் விடைகளில் வித்தியாசம் இருந்தால் அதுகுறித்து 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு மே 6ம் தேதி நீட் தேர்வு நடந்தது.இதையடுத்து, சிபிஎஸ்இ தனது இணைய தளத்தில் நீட் தேர்வின் விடைக்குறியீட்டை வெளியிட்டுள்ளது. அத்துடன்  நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியரின் ஓஎம்ஆர் தாளையும் வெளியிட்டுள்ளது.விடைக் குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள விடைகளை மாணவர்கள் தங்கள் ஓஎம்ஆர் தாளில்  குறிப்பிட்டுள்ள விடைக்குறியீடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

இவற்றை இணைய தளத்தில் மாணவர்கள் தங்களின் பதிவு எண், பாஸ்வேர்ட் ஆகியவற்றை பயன்படுத்தி லாக்இன் செய்து தெரிந்து கொள்ளலாம்.மாணவர்கள் சரியாக விடைக்குறியீடு செய்திருந்து சிபிஎஸ்இ மதிப்பெண் வழங்கவில்லை என்ற நிலை இருந்தால் அதுகுறித்து விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கியுள்ளது.

நீட் தேர்வில் ஏ,பி,சி, டி. என்ற வரிசைகளில் கேள்வித்தாள்வழங்கப்பட்டன.அதனால் கேள்வித்தாளின் குறியீட்டு எண்களைக் கொண்டு மேற்கண்ட விடைகளை சரிபார்க்க வேண்டும். விடைக்குறியீடு 27ம் தேதி வரை இணைய தளத்தில் பார்க்க முடியும்.

இந்த விடைக்குறியீடு, மாணவர்களின் விடைத்தாள் குறியீட்டு எண்கள், கேள்விக்கான விடை ஆகியவற்றில் மாற்றம் இருப்பதாக கருதினால் ரூ1000 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.ஆன்லைன் மூலமாக 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்என்றும் மேற்கண்ட கட்டணத்தை திரும்ப வழங்க முடியாது என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

CBSE - பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

No comments :
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பிளஸ்- 2 பொதுத்தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின்றன. அதன் தொடர்ச்சியாக,
மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு உளவியல்ரீதியான ஆலோசனைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் சிபிஎஸ்இ செய்துள்ளது.

அதன்படி, 1800 11 8004 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு உளவியல் ஆலோசனைகளைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பிளஸ் - 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெற்றது.

ஏறத்தாழ 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இம்முறை அந்தத் தேர்வுகள் தொடங்கிய நாள் முதலே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

குறிப்பாக, பிளஸ்-2 தேர்வில் பொருளியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட வினாத் தாள்கள் முன்கூட்டியே கசிந்ததாகத் தகவல்கள் பரவின. பத்தாம் வகுப்பு கணித பாடத் தேர்வின்போதும் இத்தகைய விமர்சனங்கள் எழுந்தன.
முதலில் அந்தக் கூற்றுகளை சிபிஎஸ்இ வாரியம் திட்டவட்டமாக மறுத்தது.
ஆனால், அதன் பின்னர், பொருளியல் மற்றும் கணித பாடத்துக்கான வினாத்தாள்கள் கசிந்ததை ஒப்புக் கொண்ட சிபிஎஸ்இ வாரியம், பொருளியல் பாடத்துக்கு மட்டும் மறுதேர்வு நடத்தியது.

இதனிடையே, வேறு சில பாடங்களிலும் குழப்பமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இத்தகைய சூழலில், சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின்றன. c​bs‌e.‌n‌i​c.‌i‌n  அல்லது c​b‌s‌e‌r‌e‌s‌u‌l‌t‌s.‌nic.‌i‌n ஆகிய இணையப் பக்கங்களில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தொடக்கக் கல்வி - குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்விச் திட்டம் - 2009 ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் 31-05-2018 நிலவரப்படி விபரங்கள் கோருதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்

No comments :

பள்ளிகளை பிரிப்பதில் குழப்பம் - BEO.,க்கு (AEEO) அதிகாரம் உண்டா?

No comments :
மாவட்ட அளவில் மேல்நிலைப் பள்ளிகளை முதன்மைக் கல்வி அலுவலரும், உயர்நிலைப் பள்ளிகளை மாவட்டக் கல்வி அலுவலரும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைமாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரும், மெட்ரிக் பள்ளிகளை ஆய்வாளரும் கவனித்து வந்தனர்.
சமீபத்தில் அவை ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே அலகாக மாற்றப்பட்டது. அனைத்து வகை பள்ளிகளையும் வட்டார அளவில் வட்டார கல்வி அலுவலர்(பி.இ.ஓ.,) குறிப்பிட்ட வட்டாரங்களைச் சேர்த்து மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர் கண்காணிக்க உள்ளனர்.உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களே வட்டார கல்வி அலுவலராக நியமிக்கப்படுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் நிலையிலான அவர்கள் தற்போது தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்கின்றனர்.

புதிய உத்தரவுப்படி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி, சி.பி.எஸ்.இ.,-ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளையும் கண்காணிக்க வேண்டும். அதன் தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலரை விட பதவியில் உயர்ந்தவர் என்பதால், அப்பள்ளிகளை ஆய்வு செய்ய முடியுமா என்ற குழப்பம் ஏற்பட்டது.மேலும் மாவட்டக் கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் பள்ளிகள் எண்ணிக்கை 500 யை யொட்டி இருக்க வேண்டும். வட்டாரத்தையும் உடைக்க கூடாது என, தெரிவிக்கப்பட்டது.

 இதனால் 3 முதல் 5 வட்டாரங்களை இணைத்து மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் ஒதுக்கப்படுகிறது. சில வட்டாரங்களில் பள்ளிகள் குறைவாகவும், சில இடங்களில் அதிகமாக உள்ளதால், 500 என்ற எண்ணிக்கை அடிப்படையில் பிரிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களே வட்டார கல்வி அலுவலராக நியமிக்கப்படுகின்றனர். பட்டதாரி ஆசிரியர் நிலையிலான அவர்கள் தற்போது தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்கின்றனர்.

தொலைநிலைக் கல்வித்திட்டத்தில் மாணவர்களை சேர்த்தால் நடவடிக்கை!

No comments :

D.TED பட்டய தேர்வு ஹால் டிக்கெட்

No comments :
தொடக்கக் கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தொடக்கக் கல்வி பட்டய இரண்டாம் ஆண்டு தேர்வு ஜூன் 4 துவங்கி, ஜூலை 20 ம் தேதி வரையும், முதலாமாண்டு தேர்வு ஜூலை5ம் தேதி துவங்கி, 21 ம் தேதி வரையும் நடக்கிறது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, ஹால்டிக்கெட்டுகளை 28-.5.-2018 முதல் பெற்று கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிளஸ் 1, 2 வகுப்புக்கு 2 புதிய பாடங்கள்

No comments :
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இந்தஆண்டு முதல், கணினி தொடர்பான, இரண்டு புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.தமிழக பள்ளி கல்வியில், முதற்கட்டமாக, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல், புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், தொழிற்கல்வி குரூப் மாணவர்களுக்கும், 'ஆர்ட்ஸ் குரூப்' மாணவர்களுக்கும், புதிதாக இரண்டு பாடங்கள் சேர்க்கப்பட உள்ளன.இந்த ஆண்டே, இந்த புதிய கணினி பாடங்கள்,அமலுக்கு வர உள்ளன. அதாவது, 'கம்யூட்டர்சயின்ஸ்' பிரிவுக்கு, 'கணினி அறிவியல்' என்ற பாடம், தொடர்ந்து நடத்தப்படும்.

ஆனால், வரலாறு, பொருளியல், வணிக கணிதம் போன்ற, ஆர்ட்ஸ் பாடப்பிரிவினருக்கு, கணினி பயன்பாடுகள் பற்றிய, 'கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்' என்ற பாடம், புதிதாக சேர்க்கப்படுகிறது.அதேபோல், அனைத்து வகை தொழிற்கல்வி குரூப்களுக்கும், 'கணினி தொழில்நுட்பம்' என்ற, பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பாடங்கள், இந்த ஆண்டு, பிளஸ் 1 வகுப்புக்கும், அடுத்த ஆண்டு முதல், பிளஸ் 2 வகுப்புக்கும் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதற்கான உத்தரவை, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் பிறப்பித்துள்ளார்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கல்வி மாவட்டங்கள் எவையெவை? - 13 மாவட்ட விவரங்கள்

No comments :
வேலூர்  - புதிய கல்வி மாவட்டங்கள்


1.அரக்கோணம்
இருப்பு:GGHSS,அரக்கோணம்.

2.ராணிப்பேட்டை

3.வேலூர்

4.குடியாத்தம்

5.வாணியம்பாடி

6.திருப்பத்தூர்.



அரக்கோணம் கல்வி மாவட்டம் உள்ளடக்கிய ஒன்றியங்கள்:

1.அரக்கோணம்

2.நெமிலி

3.காவேரிபாக்கம்


 திருவள்ளூர் - புதிய கல்வி மாவட்டங்கள்

1.திருவள்ளூர்


2.திருத்தணி


3.ஆவடி


4.அம்பத்தூர்


5.பொன்னேரி


கோவை - புதிய கல்வி மாவட்டங்கள்

1. கோவை DEO -(கோவை நகரம், பெ. ந பாளையம், காரமடை)

2. கோவை DEEO - (கிணத்துக்கடவு,

மதுக்கரை, பேரூர், தொண்டாமுத்தூர்)
3. கோவை IMS-(அன்னூர், SS குளம், சூலூர், சுல்தான்பேட்டை) பொள்ளாச்சி DEO - (பொள்ளாச்சி வடக்கு & தெற்கு, ஆனைமலை, வால்பாறை)



ஈரோடு - புதிய கல்வி மாவட்டங்கள்


1 ஈரோடு

   ஈரோடு
   மொடக்குறிச்சி
   கொடுமுடி


2.பவானி

    சென்னிமலை
    பெருந்துறை
    அம்மாப்பேட்டை
     பவானி

3 கோபி

      நம்பியூர்
      கோபி
      அந்தியூர்
      டி.என் பாளையம்

4 சத்தி

        பவானிசாகர்
        தாளவாடி
        சத்தி


சேலம் - புதிய கல்வி மாவட்டங்கள்

சேலம் நகர் 1

சேலம் புறநகர் 1
இது மணியனூர் உயர்நிலைப் பள்ளியில் செயல்படும்.

ஆத்தூர் 1
இது ஆத்தூர் ஆண்கள் பள்ளியில் செயல்படும்.

மேச்சேரி 1
இது மேச்சேரி ஆண்கள் பள்ளியில் செயல்படும்.

எடப்பாடி 1
இது எடப்பாடி ஆண்கள் பள்ளியில் செயல்படும்.



கிருஷ்ணகிரி - புதிய கல்வி மாவட்டங்கள்

1. தேன்கனிக்கோட்டை
(தல்லி, கெலமங்கலம்)
2. ஓசூர்
(ஓசூர், ஷூலகிரி, வேப்பனப்பள்ளி)
3.கிருஷ்ணகிரி
(கிருஷ்ணகிரி, காவேரிபட்டணம், பர்கூர் 50 பள்ளிகள்)
4.ஊத்தங்கரை
(ஊத்தங்கரை, மாத்தூர், பர்கூர் 50 பள்ளிகள்) 


சென்னை - புதிய கல்வி மாவட்டங்கள்

1.CENTRAL
2.EAST
3.WEST
4.NORTH
5.SOUTH

புதியதாக Chennai West கல்வி மாவட்டம் உருவாக்கப்பட உள்ளது.



காஞ்சிபுரம் - புதிய கல்வி மாவட்டங்கள்

ஜீன் 1 முதல் காஞ்சிபுரம் மாவட்டம் ஐந்து கல்வி மாவட்டமாக செயல்படும்

(1)  சிட்லபாக்கம்

(2) ஸ்ரீபெ ரும்புதூர்,குன்றத்தூர்

(3)காஞ்சிபுரம்,உத்திரமேரூர்'வாலாசாபாத்

(4)காட்டாங்குளத்தூர்,திருப்பாேரூர்,திருக்கழுகுன்றம்

(5)லத்தூர்,அச்சரபாக்கம்,சித்தாமூர்,மதுராந்தகம்


திண்டுக்கல் - புதிய கல்வி மாவட்டங்கள்

திண்டுக்கல்
திண்டுக்கல் நகர் புறநகர் சாணார்பட்டி நத்தம்


பழனி
பழனி நகர் புறநகர்,தொப்பம்பட்டி ஒட்டன்சத்திரம், ஆத்தூர்


வேடசந்தூர்
வேடசந்தூர் ரெட்டியார்சத்திரம் குஜிலியம்பாறை வடமதுரை


வத்தலகுண்டு
நிலக்கோட்டை வத்தலக்குண்டு கொடைக்கானல்


திருவண்ணாமலை  - புதிய கல்வி மாவட்டங்கள்

1.திருவண்ணாமலை,

2. செய்யாறு,

3. ஆரணி.




திருப்பூர் - புதிய கல்வி மாவட்டங்கள்


1).தாராபுரம் (தலைமையிடம்)
மூலனூர்
குண்டடம்
வெள்ளகோயில்


2).பல்லடம் (தலைமை)
பொங்கலூர்
காங்கயம்
திருப்பூர் தெற்கு

3).திருப்பூர் வடக்கு(தலைமை)
அவினாசி
ஊத்துக்குளி

4).உடுமலை(தலைமை)
மடத்துக்குளம்
குடிமங்கலம்

மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்க அரசு பள்ளிகளில் உளவியல் ஆசிரியர்கள் நியமனம்

No comments :
மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்க ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் இரு உளவியல் ஆசிரியர்கள் நியமனம்  செய்யப்பட வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியிலான பிரச்னைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண மாநில அளவில் ஒரு குழுவினை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பள்ளிக்கல்வி இயக்குனர் தலைவராகவும், நாட்டு நலப்பணி திட்ட இணை இயக்குனர் செயலாளராகவும், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் உறுப்பினர்களாகவும், உளவியல் மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்களை கொண்டு மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து அதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியிலான பிரச்னைகளை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவர்கள் தேர்வு பயம் உட்பட உளவியல் பிரச்னைகளை எதிர்கொள்வதில் சிக்கல்கள், வளர் இளம் பருவ பிரச்னைகள், மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் பிரச்னைகளுக்கு எளிதல் பாதிக்கப்பட்டு எதிர்மறையான செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுக்கு உளவியல் தொடர்பான பிரச்னைகளுக்கு தேவையின் அடிப்படையில் உளவியல் ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களது நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் பணிமூப்பு, தகுதியும் திறமையும் உள்ள ஒரு ஆண் ஆசிரியர் மூலம் மாணவர்களுக்கும், ஒரு பெண் ஆசிரியை மூலம் மாணவிகளுக்கும் தேவையின் அடிப்படையில் உளவியல் ஆலோசனைகளை வழங்க பொறுப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இதனை செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் பொறுப்பு ஆசிரியர்களாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் மற்றும் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் மூலம் நடத்தப்படும் இதர பயிற்சிகளை போன்று பயிற்சி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் பொறுப்பு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பெயர், பதவி உள்ளிட்ட விவரங்களை பெற்று முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒரு தனி பதிவேட்டில் பராமரிக்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கு பொறுப்பு ஆசிரியர்கள் வழங்கிய  ஆலோசனை விவரங்களை பதிவு செய்ய ஒரு காலமுறை பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். மாணவர்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளை தங்களது மாவட்டத்தில் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி மற்றும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

26-05-2018 மற்றும் 27-05-2018 ஆகிய விடுமுறை நாட்களில் அனைத்து கல்வி அலுவலகங்களும் பணியாற்ற வேணடும் - பள்ளிக் கல்வி இணை இயக்குநர் சுற்றறிக்கை.

No comments :