Thursday, 31 May 2018

பிளஸ் 1 மதிப்பெண் பட்டியல் ஜூன் 4ம் தேதி வினியோகம்

No comments :
பிளஸ்1 தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து தற்காலிக மதிப்பெண் பட்டியல்கள் ஜூன் 4ம் தேதி முதல் வினியோகிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

மதிப்பெண் பட்டியல்: பிளஸ் 1 தேர்வு எழுதியோருக்கு இணைய தளம் மூலமாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். அரசுத்தேர்வுத்  துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்று வழங்கப்படும் வரை மட்டுமே இந்த மதிப்பெண் பட்டியல் செல்லும்.

ஜூன் 4ம் தேதி பிற்பகல் முதல் மாணவர்கள் தங்கள் பள்ளி அல்லது தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். மேலும் www.dge.tn.nic.in  இணைய தளத்தில் இருந்தும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த மதிப்பெண் பட்டியல்களில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது தேர்வு மைய பள்ளித் தலைமை ஆசிரியர் கையெழுத்து போட்டிருந்தால் மட்டுமே செல்லும்.

விடைத்தாள் நகல், மறுகூட்டல்: பிளஸ் 1 விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு  விண்ணப்பிக்க விரும்புவோர் பள்ளி மற்றும் தேர்வு எழுதிய மைங்கள் மூலமாக ஜூன் 1, 2, 4ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே மறு மதிப்பீடு கேட்டு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் பெற்ற பிறகே மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம்: விடைத்தாள் நகல் பெறுவதற்காக பகுதி 1 மொழிப்பாடத்துக்கு 550, மொழிப் பாடம் 2 (ஆங்கிலம்), 550, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் 275கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டல் செய்ய மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியல் பாடங்கள் தலா 305, மற்ற பாடங்களுக்கு தலா 205 செலுத்த வேண்டும். கட்டணங்கள் அந்தந்த பள்ளிகளில் பணமாக செலுத்த வேண்டும்.

சிறப்பு துணைத் தேர்வு:  பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி தனியாக அறிவிக்கப்படும். பிளஸ் 1 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் பிளஸ் 2 வகுப்பில் பெறும் மதிப்பெண்களுடன் சேர்த்து அடுத்த ஆண்டு தேர்வு முடிவில் கணக்கிடப்படும். பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் தற்போது நடக்க உள்ள சிறப்பு துணைத் தேர்வில் எழுதி தேர்ச்சி பெறலாம். அல்லது பிளஸ் 2 தேர்வின் போதும் எழுத வாய்ப்பு வழங்கப்படும். 

No comments :

Post a Comment