பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறையில் மாறுதல் வழங்க மாவட்டகல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், இணை இயக்குநர் ஆகியோர் தகுதி உடையவர்கள்.

2017-2018ம் ஆண்டில் பணி நிரவல் பெற்றவர்கள் மாறுதல் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள அனுமதி வழங்கலாம்.ஒரு இடத்துக்கு ஒருவருக்கு மேல் மாறுதல் கேட்டால் அவர்களுக்கு சில முன்னுரிமையின் அடிப்படையில் வழங்க வேண்டும். குறிப்பாக புற்றுநோயாளிகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, மற்றும் டயாலசிஸ் செய்து கொள்பவர்கள், முற்றிலும் கண்பார்வையற்றவர்கள் என 21 வழிகாட்டுதல்கள் படி வழங்க வேண்டும்.

சிறப்பு முன்னுரிமை ்அடிப்படையில் மாறுதல் பெறுவோர் 3 ஆண்டுகள் கவுன்சலிங்கில் பங்கேற்க முடியாது. மலைப் பாங்கான இடங்களுக்கு செல்ல தயக்கம் காட்டுவார்கள் என்பதால் மலை சுழற்சி முறையை பின்பற்ற வேண்டும். ஈராசிரியர் பள்ளியில் ஒருவர் மாறுதல் பெற்றால் புதிய ஆசிரியர் பணியில் சேர்ந்த பிறகுதான் அவரை விடுவிக்க வேண்டும். இதுபோல 21 வழி்காட்டு நெறிமுறைகள் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.