அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் பொதுவான சட்டம் மற்றும் விதிகளை வகுத்திட மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் முன் வைக்கப்பட்ட பள்ளி கல்வி துறை கொள்கை விளக்கு குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு பொது பாடத்தின்படி மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் அனைத்தும் மாநில பள்ளிக்கல்வி பொதுப்பாட சட்டம் 2010-ன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 6 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கான கட்டணத்தை கல்வி கட்டணக் குழு நிர்ணயித்துள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட பள்ளியால் நிர்ணயிக்கப்ட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த ரூ.63,86,290 ரூபாயை மாணவர்களிடம் திரும்ப வழங்க கட்டண நிர்ணய குழு ஆணையிட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.