பள்ளி, கல்லுாரிகளில் தேர்தல் கல்விக்குழு அமைத்து வாக்காளர் ஆவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாவட்டங்களில் புதிய வாக்காளர் ஆவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி, கல்லுாரிகளில் தேர்தல் கல்விக்குழு அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதில் ஊராட்சியளவில் சிறந்த கல்விபணியாற்றும் ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியர், கல்லுாரி என்றால் முதல்வர், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதி என மூவர் நியமிக்கப்பட்டு ,தொடர் விழிப்புணர்வு பணியில் ஈடுபடவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாணவர்களுக்கு வாக்காளராவதில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தேர்தல் கல்விக் குழு துவங்கப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று பிளக்ஸ் பேனர்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது,'என்றார்.