புதிய பஸ் பாஸ் வழங்கப்படும் வரை, பழைய பஸ் பாசைக் காட்டி, மாணவர்கள், இலவசமாக பயணிக்கலாம்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், பெத்திக்குப்பத்தில், 125 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடிஅமைக்கப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்த அமைச்சர், பள்ளிகள் திறந்தபின்னர் மாணவர்கள் தடையின்றி அரசு பஸ்களில் பயணிக்கலாம். புதிய பாஸ்கள் வழங்கப்படும் வரை பழைய பாஸ்களை காட்டி பயணிக்கலாம், என்றார்.

இந்த சோதனைச்சாவடி குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:இந்த சோதனைச்சாவடியில், போக்குவரத்து, காவல், வருவாய், வணிகவரி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மதுவிலக்கு உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும். இதனால், சட்ட விரோத பொருட்கள் கடத்தல், முறைகேடான வாகன இயக்கம், வரி ஏய்ப்பு, வனப்பொருட்கள், வன விலங்குகள் கடத்தல் தடுக்கப்படும், என்றனர்.